பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட வழக்கு: ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை
பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது.
பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது.
பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் 14 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்திவருகிறது. தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகம் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சோதனை இதுவாகும். ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகியோர் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுடன் இணைந்து தோடா, கிஷ்ட்வார், ரம்பன், அனந்த்நாக், புட்காம், ரஜோரி, தோடா, ஷோபியன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?
2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதாக கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனவே, பயங்கரவாதத்தால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதை நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜூலை 10ஆம் தேதி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட வழக்கில் ஆறு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.