மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு 
இந்தியா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார்.

DIN

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் புதன்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார்.

தில்லி சென்றுள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மருத்துவ பூங்கா அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கும் மத்திய அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளதாக அமரீந்தர் சிங் பேட்டியின் போது குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT