நாட்டில் 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு
நாட்டில் கடந்த 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 154 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,22,50,679 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.51 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து மிக அதிகபட்சமாகும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 437 பேர் பலியாகினர். இதனுடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 4,32,079 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 3,69,846 ஆக உள்ளது. இது கடந்த 146 நாள்களுக்குப் பின் பதிவாகும் குறைந்த எண்ணிக்கையாகும். இது மொத்த பாதிப்பில் 1.15 சதவீதமாகும்.