தடுப்பூசி செலுத்துவதில் உ.பி. முன்னிலை 
இந்தியா

6 கோடி தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலமானது உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது.

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியைக் கடந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 5,07,22,629 முதல் தவணை கரோனா தடுப்பூசிகளும், 94,27,421 இரண்டாவது கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

6 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்திய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 23.67 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை: கி.வீரமணி

கும்பகோணத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT