மும்பையில் கனமழை: நீர்தேக்கத் தொட்டி உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம் 
இந்தியா

மும்பையில் கனமழை: நீர்தேக்கத் தொட்டி உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்

மும்பையில் பெய்த கனமழையால் நீர்தேக்கத் தொட்டி உடைந்ததில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

DIN

மும்பையில் பெய்த கனமழையால் நீர்தேக்கத் தொட்டி உடைந்ததில் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் இன்று பெய்த கனமழையால் அப்பகுதியில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டி உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்களின் உடைமைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள பாதிப்பால் அப்பகுதியில் மின்சார வசதி பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மீட்புப் படையினர் வெள்ளநீரால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT