இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஏன் தேவை? - ஆப்கன் விவகாரத்துடன் ஒப்பிடும் மத்திய அமைச்சர்

DIN

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அவசியத்தை ஆப்கன் சம்பவங்கள் விளக்குவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகள் ஆப்கன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் முயற்சியிலும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அவசியத்தை ஆப்கன் சம்பவம் விளக்‍குவதாகத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் கடினமான கால கட்டத்தில் உள்ளனர். இதற்காகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இங்கு வர இந்தியா உதவி செய்யும் என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக நேற்று 28 ஆப்கானியர்கள் உள்பட 168 பேர் காபூலில் இருந்து இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. 

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. அதேநேரத்தில் அதேநேரம், இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் இந்த பட்டியலில் சேர்க்‍கப்படாதது குறிப்பிடத்தக்‍கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT