கர்நாடகத்தில் 1,224 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,668 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 22 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,42,250 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,85,700 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,206 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் மிக்-21 ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
இன்றைய நிலவரப்படி 19,318 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.