இந்தியா

எஸ்பிஐ கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருள்கள் வாங்குவோர் கவனிக்க..

DIN


பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்போர், இனி தவணை முறையில் பொருள்கள் வாங்கும் போது அதற்கான செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.99 செலுத்த வேண்டியது இருக்கும்.

கிரெடிட் கார்டுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் இந்த புதிய கட்டண நடைமுறை டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்போரின் மின்னஞ்சலுக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதியே அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 
இணையதளம், செயலி, கடைகளில் பொருள்களை தவணை முறையில் வாங்குவதற்கான செயல்பாட்டுக் கட்டணம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரூ.99 மற்றும் விதிகளுக்கு உள்பட்டு கூடுதல் வரிகளும்  விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண விகிதம், ஒரு பொருளை எஸ்பிஐ கிரெடிட் கார்டில் வாங்கி, அந்தத் தொகையை தவணை முறையில் செலுத்துவதாக இருந்தால்தான் இந்த கட்டண மாற்றம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT