இந்தியா

ஓமைக்ரான் கரோனா: விதிகளை ஆய்வு செய்யும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

DIN

சர்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில, யூனியன் பிரதேச அலுவலர்களிடம் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் குறிப்பாக ஓமைக்ரான் கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக, சர்வதேச விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய அரசை காட்டிலும் மகாராஷ்டிரா அரசு, கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களில் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஓமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாடுகளுக்கு வி்மான நிலையங்களிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மூன்று முறை தங்களின் சொந்த செலவில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மற்றவர்கள், கரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் 14 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள், கரோனா பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ள விதிகளை பின்பற்றுமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT