இந்தியா

நாட்டில் புதிதாக 6,822 பேருக்கு கரோனா

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புத்தாக 6,822 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 558 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த பாதிப்பாகும்.

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3,277 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை  பெற்று வருவோரின் எண்ணிக்கை 95,014 ஆகக் குறைந்துள்ளது. இது 554 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 10,004 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவக்கு 220 பேர் பலியாகியுள்ளனர். 

நாட்டில் இதுவரை 128.75 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT