காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ராஜ்புரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ராஜ்புரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், ராஜ்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையுடம் படிக்க | பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிப்பதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை எதிா்த்து இந்தியா வாக்களிப்பு
Advertisement
இதையடுத்து ராஜ்புராவிற்கு புதன்கிழமை அதிகாலை சென்ற போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உஸ்கம் பத்ரி என்ற என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.