புதுதில்லி: அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் டாக்கா புறப்பட்டார்.
பாகிஸ்தானுடன் வங்கதேசம் நடத்திய போரின் 50 ஆவது வெற்றி தினம், நாடு உதயமான 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (டிச.16,17) என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வங்கதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையுடம் படிக்க | மாதம் ரூ.85,000 சம்பளத்தில் தமிழ்நாடு குடிசைப் ஒழிப்பு வாரியத்தில் வேலை
இதையடுத்து வங்கதேச அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்காவிற்கு புதன்கிழமை காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
இதையுடம் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.