இந்தியா

தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பு 20ஆக அதிகரிப்பு

DIN

தில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்திய வருபவர்களில் சிலருக்கும் உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தில்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 20ஆக அதிகரித்துள்ளது. இதில், 10 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று அனைவரும் நலமாக உள்ளனர். யாரும் தீவிர சிகிச்சையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT