முகப்பு
இந்தியா

நாளை(டிச.21) பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தியா

நாளை(டிச.21) பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வருகிற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைகிறது. 

இன்று மக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்தல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் செவ்வாய்கிழமை(டிச.21) காலை 9.15 மணியளவில் தொடங்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பாஜக அமைச்சர்கள், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைய உள்ள நிலையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →