முகப்பு
இந்தியா

ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆனது: அறிய வேண்டிய 10 தகவல்கள்

முதன் முதலாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இந்தியாவுக்குள் பரவி, தற்போது தமிழகத்துக்குள்ளும் கால்தடம் பதித்துவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆனது: அறிய வேண்டிய 10 தகவல்கள்
பகிர்:


முதன் முதலாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இந்தியாவுக்குள் பரவி, தற்போது தமிழகத்துக்குள்ளும் கால்தடம் பதித்துவிட்டது.

நாட்டில் புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒமைக்ரான் பாதிப்பு 213 ஆக உள்ளது. இதில், தில்லியும், மகாராஷ்டிரமும் அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாளை இது பற்றி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் தொடர்பாக நாம் அறிய வேண்டிய 10 தகவல்கள் இங்கே..

நாட்டிலேயே அதிகபட்சமாக தில்லியில் 57 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 54 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகத்தில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும் கேரளத்தில் 15 பேருக்கும் குஜராத்தில் 14 பேருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

ஒற்றை இலக்கங்களாக. ஜம்மு - காஷ்மீரில் 3 பேருக்கும், ஒடிசா, உத்தரப்பிரதேசத்தில் தலா 2 பேருக்கும், தமிழகம், ஆந்திரம், சண்டிகர், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பரிசோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிவுறுத்தல் கடிதத்தில், புதிதாக ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மகாராஷ்டிரத்தில், ஒமைக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், பள்ளிகள் மூடப்பலாம் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில், கரோனா கரோனா பெருந்தொற்று காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 1ஆம் தேதிதான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இன்று புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,317 ஆக உள்ளது. 318 பேர் பலியாகினர்.

இந்தியாவில் 575 நாள்களுக்குப் பிறகு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 78,190 ஆகக் குறைந்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →