கோப்புப்படம் 
இந்தியா

நண்பர்களால் கொல்லப்பட்ட சிறுவன்...கை, கால் வெட்டப்பட்ட உடல் வனப்பகுதியில் கண்டெடுப்பு

ஜார்க்கண்ட் தியோகர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் அவரது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அச்சிறுவனின் கழுத்தறுக்கப்பட்டு, கை, கால்களை துண்டிக்கப்பட்டு, உடல் சாக்கில் அடைக்கப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து விரிவாக விளக்கிய மண்டல காவல்துறை துணை அலுவலர் பவன் குமார், "நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புதன்கிழமை புகார் அளித்தனர். விசாரணையின் போதே, ​​​​பாதிக்கப்பட்ட சிறுவனின் 14 வயது நண்பரை கைது செய்தோம். 

செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஜாசிதிஹ் காவல் நிலையப் பகுதியில் உள்ள ரோகினி கிராமத்தில் சிறுவனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்ததாக கைது செய்யப்பட்ட நண்பர் கூறியுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து கும்ராபாத் ஸ்டேஷன் சாலைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு மற்றொரு நண்பர் அவினாஷ், அவர்களுடன் சேர்ந்திருக்கிறார். 

பின்னர், மூவரும் பலங்கா பஹாட் காட்டை நோக்கிச் சென்றபோது, ​​அவினாஷுக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, அவினாஷ் கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார். பின்னர் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. 

கொலை செய்த பிறகு, கை, கால்களை துண்டித்து, மூன்று சாக்கு மூட்டைகளில் உடல் உறுப்புகளை அடைத்து அவினாஷ் காட்டில் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றத்தை செய்துள்ளதாக அவினாஷ் ஒப்பு கொண்டுள்ளார். ரத்தக்கறை படிந்த கத்தியும், பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல்), 120பி (சதிச் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT