இந்தியா

ஒமைக்ரான் பரவல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைவு 

DIN


புது தில்லி: ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,47,79,815 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,42,23,263 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 77,032 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,41,01,26,404 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,09,113 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்   விரைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த குழு, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை மாநில, மாவட்ட நிா்வாகங்களுக்கு அக்குழு வழங்கும். 3 முதல் 5 நாள்கள் தங்கியிருந்து மாநிலங்களுக்கான ஆலோசனைகளை வழங்குவா். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவதற்கான தேவையான ஆலோசனைகளை வழங்குவது, கரோனா பரிசோதனை மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்புவது, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துவா் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT