முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரயில் மோதி 2 யானைகள் பலி

ஒடிசா மாநிலம் குர்தா வனப்பகுதிக்கு உள்பட்ட பகுதியில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியாகியுள்ளன. இந்த  விபத்து நேரிட்டபோது எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Updated On : 27 டிசம்பர், 2021 at 4:41 PM
கோப்பிலிருந்து..
பகிர்:


ஒடிசா மாநிலம் குர்தா வனப்பகுதிக்கு உள்பட்ட பகுதியில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியாகியுள்ளன. இந்த  விபத்து நேரிட்டபோது எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

புசந்தபூர் அருகே சனிக்கிழமை இரவு இந்த விபத்து நேரிட்டுள்ளது. இரவு சுமார் 7 மணியளவில் மூன்று யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று வந்தது.

அப்போது, சரக்கு ரயில் யானைகள் மீது மோதியதில், 19 வயது யானை சம்பவ இடத்திலேயே பலியாக, 10 வயதான ஆண் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அதன் உடல் கண்டெடுக்கப்பட்டது. 17 வயது யானை மட்டும் தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிட்டதால் காயமின்றி தப்பித்தது.

Advertisement

இறந்த யானைகளுக்கு உடற்கூராய்வு செய்ததில், இரண்டுமே உள்ளுருப்பு காயத்தால் பலியாகியிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் கூறுகையில், ரயில் ஓட்டுநருக்கு, யானைகள் கடக்கும் பகுதி என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டும், யானைகளை கண்காணிக்கும் குழுவினர், அதே வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

இநத் விபத்து நேரிட்டபோது பதிவான விடியோ ஒன்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதில், இருள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சரக்கு ரயில் வருவதும், அது யானைகள் மீது மோதும் போது யானைகளின் பிளிரல் சப்தமும், ரயிலிலிருந்து அபாய எச்சரிக்கை ஒலியும் கேட்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.