இந்தியா

செல்பியால் கோபமடைந்த கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர்

DIN

அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க முயன்ற தொண்டரை கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் தடுத்து நிறுத்திய காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் சிவக்குமார். இவர் புதன்கிழமை மாண்டியா மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய அவரிடம் செல்பி எடுக்க தொண்டர் ஒருவர் செல்போனை அவரது முகத்திற்கு முன்பாக நீட்டிய நிலையில் சிவக்குமார் ஆத்திரமடைந்தார்.

உடனடியாக அவரது கைகளைப் பிடித்த அவர் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

அவரது கைகளில் என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். சில நேரங்களில் மனிதர்களின் கோபம் வெளிப்படுவதில் தவறேதும் இல்லை என சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT