முகப்பு
இந்தியா

எரிபொருள் விலை உயர்வு: இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

இமாசலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2021 at 4:33 PM
இமாசலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பகிர்:

இமாசலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ராஜஸ்தானில் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இமாசலிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சாலைகளில் பதாகைகளுடம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், எரிபொருள் விலையை உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.