இந்தியா

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

IANS


புது தில்லி: பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போல, ஜியோவும், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அன்றைய நாளின் டேட்டா காலியாகிவிட்டால், உடனடியாக ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில், தற்போது ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள், பிறகு கட்டணத்தை செலுத்துங்கள் என்ற வசதியை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சலுகையின் மூலம் ப்ரீபெய்டு பயனாளர்கள் 11 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜிபி கொண்ட அவசர டேட்டா கடன் திட்டத்தை அதிகபட்சமாக 5 முறை பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான சேவையை தரும் வகையில், அண்மையில், அதன் தொலைத்தொடர்புகளை இரண்டு மடங்காக அதிகரித்து, டேட்டா திறன் மற்றும் வேகத்தை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT