பெட்ரோல் விலை 100 ஆனதில் பெட்ரோல் நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடமா? 
இந்தியா

பெட்ரோல் விலை 100 ஆனதில் பெட்ரோல் நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடமா?

பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், வழக்கமாக 100 ரூபாய் கொடுத்து நூறுக்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொல்வது வழக்கம்.

DIN


பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், வழக்கமாக 100 ரூபாய் கொடுத்து நூறுக்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொல்வது வழக்கம்.

ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் சில்லறை கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.100க்கு பெட்ரோல் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொன்னதை இந்த எண்ணெய் நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, ஒரு லிட்டர் பெட்ரோலை நூறு ரூபாய்க்கு போடும் வகையில் விலையை உயர்த்திவிட்டார்கள்.

இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயைத் தாண்டி அடுத்து புதிய சாதனையைப் படைக்க முயன்று கொண்டிருக்கிறது. இதனால் ஏழைய எளிய மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இதற்கிடையே, பெட்ரோல் விலை 100ஐத் தொட்டதில் பெட்ரோல் நிலையங்களுக்கும் ஒரு சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நான்கு இலக்க எண்களைக் கொண்ட டிஜிட்டல் பேனர்களைப் பயன்படுத்தி வந்தவர்கள், தற்போது 100 ரூபாய் இத்தனை காசுகள் என்று ஐந்து இலக்கங்களில் விலையை மாற்ற முடியாமல், புதிய டிஜிட்டல் பலகைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.

அதுவரை இருக்கும் பழைய 4 இலக்க டிஜிட்டல் பலகையில் 99.99 என்று பதிவிட்டு அதற்கு மேல் மாற்ற முடியாமல், புதிய டிஜிட்டல் பலகைக்காக காத்திருக்கிறார்கள். ஒரு சில பெட்ரோல் பங்குகள் கைகளால் எழுதும் பலகையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. 

இதற்கு முன்பும், பெட்ரோல்  நிலையங்களுக்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டது. அது 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அதாவது முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரு இலக்க எண்ணிலிருந்து 2 இலக்கத்துக்கு மாறிய போது.. அப்போது பெட்ரோல் விலை ரூ.2.39 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.12.23க்கு விற்பனையானது. அப்போதும் இதுபோன்ற இரட்டை இலக்க பலகைகளுக்கு மாறும் சூழல் பெட்ரோல் நிலையங்களுக்கு ஏற்பட்டது. 

தற்போதாவது கொஞ்சம் விழித்துக் கொண்டு வாங்கும் போதே ஆறு இலக்க எண்களைக் கொண்ட டிஜிட்டல் பலகைகளை வாங்கி விடுவது நல்லது என்று மனம் நொந்த வாடிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT