முகப்பு
இந்தியா

‘ஊழலும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’: ஹர்சிம்ரத் கெளர்

ஊழலும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என சிரோமணி அகாலி தளத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் பாதல் திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
சிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கெளர் பாதல் (கோப்புப்படம்)
பகிர்:

ஊழலும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என சிரோமணி அகாலி தளத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் பாதல் திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

அடுத்தாண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மின்சாரப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து ஹர்சிம்ரத் கெளர் கூறியதாவது,

காங்கிரஸ் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். பஞ்சாப் முழுவதும் இன்று வீதிகளில் இறங்கியுள்ளது. மின்சார நெருக்கடி தொடர்ந்து நிலவி வருகின்றது. ஆனால், மக்களின் பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல், தங்கள் பதவியை பாதுகாக்க தில்லி சென்று வருகிறார்கள்.

இது கொள்ளையர்களின் ஆட்சி. ஊழலும், காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →