முகப்பு
இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை 37.07 கோடி தடுப்பூசிகள் வழங்கல்: மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 37.07 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 37.07 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தகவலில்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 37.07 கோடிக்கு மேல் (37,07,23,840) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 23,80,000 டோஸ் தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன. 

மாநிலங்களில் 1.66 கோடிக்கும் அதிகமான (1,66,63,643) தடுப்பூசிகள் இருப்பில் அல்லது பயன்படுத்தப்படாமல் உள்ளன. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவச தடுப்பூசியை வழங்கி வருகிறது. ஜூன் 21 முதல் தொடங்கப்பட்ட புதிய தடுப்பூசி இயக்கத் திட்டத்தின்படி தடுப்பூசி போடப்படுவது அதிகரித்துள்ளது. 

மேலும் புதிய திட்டத்தின்படி மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 75% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →