முகப்பு
இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு: பெங்களூருவில் காங். போராட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடகத்தில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த வாரமே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில், ஒரு சில மாநிலங்களில் நூறு ரூபாயைத் தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிறன்று, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகாா், பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

அது மட்டுமல்லாமல், ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது.

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விற்பனை செய்வதே மக்களுக்கு மோடி அரசு அளித்துள்ள பரிசு என்று போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். 

பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →