முகப்பு
இந்தியா

மும்பையில் மற்றொரு கட்டட விபத்தில் 3 பேர் பலி

மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியா

மும்பையில் மற்றொரு கட்டட விபத்தில் 3 பேர் பலி

மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. ஹனுமன் நகர் பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று மும்பைக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.  

முழு கட்டுரையைப் படிக்க →