இந்தியா

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் உண்மையை பேச வேண்டும்: சஞ்சய் ரெளத்

DIN

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உண்மை நிலையை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி குறித்து விவாதிக்கப்பட்டது. 

அப்போது பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரெளத் பேசியதாவது, 

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரது செல்லிடப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் முக்கிய நபர்களின் செல்லிடப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதன் பின்புலத்தில் மிகப்பெரிய காரணம் உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

வெளிநாட்டை சேர்ந்த உளவு நிறுவனம் மூலம் இந்திய முக்கியப் பிரமுகர்களின் செல்லிடப்பேசிகள் உளவுபார்க்கப்படுவது நாட்டின் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT