தொடர் கனமழை: மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை
மும்பையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வானிலை மோசமடைந்த காரணத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மண்டல வானிலை மைய தலைவர் ஜெய்ந்த சர்க்கார் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், மத்திய மகாராஷ்டிரம் மற்றும் கொங்கன் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீட்டிக்கும். இதனால் மும்பை, தாணே, நவிமும்பை உள்பட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2 நாள்களில் பெய்த கனமழையால் மும்பை, தாணே உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ஏற்கனவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.