முகப்பு
இந்தியா

பஞ்சாப் தேர்தல்: புதிய வியூகத்தை அமைத்த காங்கிரஸ்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில், தற்போதுள்ள 30 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில், தற்போதுள்ள 30 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் புதிய வியூகத்தின்படி தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டின் தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிக்குள்ளேயே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், ஆட்சிக்கு எதிரான மனநிலையை சமாளிக்கும் வகையில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய எம்எல்ஏக்களை தொகுதி மாறி போட்டியிட ஆலோசனைக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படவுள்ளது.

இதனிடையே, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள சித்து, பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனுக்கு சென்று தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.

செயல் தலைவர் குல்ஜித் நக்ரா, ஆறு எம்எல்ஏக்கள், பஞ்சாப் மாணவ காங்கிரஸ் தலைவர் ஆகியோர் அவருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவை பெறும் வகையில் சித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →