முகப்பு
இந்தியா

தொடரும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாஸஸ் விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் அமளிக்கு இடையே நேற்று இரு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று காலை வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க கோரி கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர்.

இதையடுத்து இரு அவைகளையும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.