பஞ்சாப் : இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு எல்லைக் கண்காணிப்பில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் திடீரென இருவர் எல்லையத் தாண்டி வந்துகொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களை துரத்திச் சென்று பலமுறை எச்சரித்தும் கேட்காமல் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஊடுருவிய இருவரும் பலியானார்கள்.
மேலும் அவர்கள் யார் என்கிற விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் , அப்பகுதியை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.