முகப்பு
இந்தியா

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: ம.பி. அரசு

மத்தியப் பிரதேசத்தில் 12 வயதுக்கும் குறைவான குழந்தை இருக்கும் பெற்றோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 4 ஜூன், 2021 at 3:00 PM
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: ம.பி. அரசு
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் 12 வயதுக்கும் குறைவான குழந்தை இருக்கும் பெற்றோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் கரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் இன்று இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 12 வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

ஒரு வேளை, மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களை கவனித்துக் கொள்ள அவர்களது பெற்றோர் அவர்களுடன் இருப்பார்கள் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.