முகப்பு
இந்தியா

கங்கை நதியில் மிதந்து வந்த பச்சிளம் பெண் குழந்தை

பிறந்த வெறும் 22 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, கங்கை நதியில் ஒரு மரப் பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
கங்கை நதியில் மிதந்து வந்த பச்சிளம் பெண் குழந்தை
பகிர்:


காசிபூர்: பிறந்த வெறும் 22 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று, கங்கை நதியில் ஒரு மரப் பெட்டியில் மிதந்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் கங்கை நதியில், ஒரு மரப்பெட்டி மிதந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்து குழந்தையின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதனை அங்கு படகோட்டிக் கொண்டிருந்த ஒருவர் பார்த்து, அந்தப் பெட்டியை திறந்த போது, அதில் பச்சிளம் பெண் குழந்தை அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

துணியால் மூடப்பட்டிருந்த அந்தக் குழந்தையுடன் சில இந்துக் கடவுளின் புகைப்படங்களும், குழந்தையின் பிறந்த ஜாதகமும் இருந்துள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். உடனடியாக குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியில் கிடைத்ததால், காப்பக ஊழியர்களால் கங்கா என்று குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →