மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மதியம் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது.
இந்நிலையில் திங்கள்கிழமை கூடிய மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.