முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டார் ஜெ.பி.நட்டா

புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) கரோனா தடுப்பூசி வசதியை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பார்வையிட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
பகிர்:

புது தில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) கரோனா தடுப்பூசி செலுத்தும் வசதியை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பார்வையிட்டார். 

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் 9-ம் தேதி ஜெ.பி.நட்டா தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியது, 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று மருத்துவமனையில் உள்ள மூத்த குடிமக்களுடன் உரையாற்றினார். 

மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா கரோனா தடுப்பில் முன்னணியில் இருப்பதை நிரூபித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →