புணேவில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது ஏப்.30 வரை நீட்டிப்பு
அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
குறிப்பாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில துணை முதல்வர் அஜித்பவார் புணேவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படுவது ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,952 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.