முகப்பு
இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அண்மைக் காலமாக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது.

தேர்தலையொட்டி கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டர் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான 3 மாத காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கூடுதலாக ரூ. 175 என்ற அளவு உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →