முகப்பு
இந்தியா

ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு
பகிர்:


கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பிபிகஞ்ச் பகுதியில் ஜன்கல் கௌடியா என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்களும் மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த காவல்துறை மூன்று உடல்களையும் மீட்டனர். அதில், இரண்டு மகள்களின் உடல்களும் தாயின் சேலையுடன் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களது உடல்களில் எந்தக் காயமும் இல்லை என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மாயா மற்றும் அவரது மகள்க ஷிவானி(13), அர்பிதா (9) என்பது தெரிய வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாயா, தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →