புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பாஜக தொண்டர்களே காரணம்: உமாபாரதி
பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இந்தியாபுதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதற்கு பாஜக தொண்டர்களே காரணம்: உமாபாரதி
பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
பாஜக தொண்டர்கள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை விவசாயிகளுக்கு ஏற்படுத்தாமல் இருந்ததாலேயே அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிக்க | அச்சமூட்டும் கனமழை செய்திகள்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்கு பாஜக தொண்டர்களே காரணம் என மத்திய அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “என்னைப் போன்றவர்களுக்கு பிரதமரின் அறிவிப்பு வலியை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண் சட்டங்களைக் குறித்த முக்கியத்துவத்தை விவசாயிகளின் மத்தியில் ஏற்படுத்த முடியாததற்கு பாஜக தொண்டர்களே காரணம். நம்மால் ஏன் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை? என உமாபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.