எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி
திடீர் உடல் நலக் குறைவால் லாலு பிரசாத் யாதவ் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல் நலக் குறைவால் லாலு பிரசாத் யாதவ் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.