முகப்பு
இந்தியா

காஷ்மீரில் மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒருவர் பலி

தாக்குதலை தொடர்ந்து, ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் மூன்று இடங்களில் நேற்று (சனிக்கிழமை) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. மூன்றாவது தாக்குதல் அனந்த்நாக் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், மத்திய ரிசர்வ் காவல் படையின் பதுங்கு வழியில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக, அதில் யாரும் காயம் அடைவில்லை. மாலை 5:50 மணியளவில் காரா நகர் பகுதியில் மஜித் அகமது கோஜ்ரி என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இருப்பினும், படமாலு பகுதியில் மற்றொருவர் மீது இரவு 8 மணி அளவுக்கு தாக்குதல் நடத்தப்படடது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "முகமது ஷாபி தார் சுடப்பட்டு காயமடைந்தார். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களிலும் தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.