முகப்பு
இந்தியா

‘ஒரு விடியோவை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது’: லக்கிம்பூர் விவகாரத்தில் காவல்துறை

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதும் ஒரு காணொலியை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என லக்னெள காவல்துறை கூடுதல் இயக்குநர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 6 அக்டோபர், 2021 at 11:50 AM
கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் மோதும் ஒரு காணொலியை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என லக்னெள காவல்துறை கூடுதல் இயக்குநர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.

விவசாயிகள் மீது கார் ஏற்றும் காணொலி சமூக ஊடகங்கள் நேற்று முதல் பரவி வருகிறது. இந்த காணொலி அனைவரையும் பதைபதைக்க வைக்கின்றது.

Advertisement

இந்த காணொலி குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநரிடர் கூறியது,

இந்த காணொலி இச்சம்பவத்தில் ஒரு ஆதாரமாக இருக்கலாம், ஆனால் ஒரு வீடியோவைப் பார்த்து எங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.