இந்தியா

பெங்களூருவில் 58% இளைஞர்களுக்கு இரு தவணை தடுப்பூசி: சென்னையில்?

DIN


பெங்களூருவில் 58 சதவிகித இளைஞர்களுக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது பெங்களூருவில் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநில கரோனா தடுப்பூசி பட்டியலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் பகிர்ந்துள்ளார். 

அதில் அக்டோபர் 5-ம் தேதி வரை பெங்களூருவில் 58 சதவிகித இளைஞர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக உடுப்பியில் 48 சதவிகிதத்தினருக்கும், குடகில் 46 சதவிகிதத்தினருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை கர்நாடக மாநிலம் முழுவதும் 36 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் 58 சதவிகித இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் இது 9,81,130 ஆகும். இந்நிலையில், சென்னையில் 18 லட்சம் பேருக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 54.12 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT