இந்தியா

'2047-க்குள் 100 நகரங்களில் மெட்ரோ'

DIN

 
நாட்டில் 2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மெட்ரோ திட்டங்களும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில்,  2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களை இணைக்கும் வகையில், மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், தற்போது கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது 2047-ஆம் ஆண்டுக்குள் 10 மடங்கு அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT