இந்தியா

நாட்டில் புதிதாக 18,454 பேருக்கு தொற்று: 160 பேர் பலி

DIN

புதுதில்லி:  நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,454 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 160 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,446 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,451-ஆக உயா்ந்துள்ளது. 

17,561 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,34,95,808 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,78,831-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 160 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,52,851 ஆக அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 100 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை மட்டும் 48,08,665 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 59,57,42,218 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 12,47,506 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT