இந்தியா

உ.பி.யில் பரவும் டெங்கு காய்ச்சல்: பலி 50 ஆனது

DIN


பிரோஸாபாத்: டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் ஏராளமானோர் குவிந்து வரும் நிலையில், காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் மாவட்டத்தில் பத்து பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதன்மை சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சுமார் 36 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு 3,719 பேர் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சல் பாதித்து வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கவனக்குறைவாக இருந்த மூன்று மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT