இந்தியா

அதிகரிக்கும் டெங்கு: உ.பி.யில் புதிதாக 105 பேர் பாதிப்பு

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் நகரில் இன்று (செப்.6) ஒரு நாளில் மட்டும் 105 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு உத்தரப் பிரதேசமான ஃபிரோஸாபாத், மதுரா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவிலான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 50 போ் டெங்கு காய்ச்சலால் பலியாகினா். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனினும் இதுவரை டெங்குவிற்கு 51 பேர் உயிரிழந்துள்ளனர். 

பொது இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியச் செய்யவும், பானைகள், பிளாஸ்டிக் உபகரணங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT