இந்தியாவில் 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
இந்தியாவில் இதுவரை 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-16) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-16) தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,41,323 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 76,57,17,137 (இன்று காலை10 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 30,87,70,934 இரண்டாம் தவணை - 4,87,22,784 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 14,61,56,251 இரண்டாம் தவணை - 6,49,46,700 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,44,61,804 இரண்டாம் தவணை - 5,03,32,329 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,65,571 இரண்டாம் தவணை - 86,39,913 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,40,244 இரண்டாம் தவணை - 1,41,99,628 |
| மொத்தம் | 76,57,17,137 |