இந்தியா

இமாச்சலில் கனமழை: ஒரே நாளில் 10 பேர் பலி

DIN

இமாச்சலில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கனமழை தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக 123 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை ரூ,1108 கோடி மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 130 நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 432 பேர் பலியாகியுள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர். பலத்த மழையால் 857 வீடுகளும், 700 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை கணக்கிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT