முகப்பு
இந்தியா

ஆந்திரம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
ஆந்திரம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
பகிர்:


புது தில்லி : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவுக்கு இடையே அடுத்த 12 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த  தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வாக மாறி, வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் தீவிரமடையும் என்றும், இது செப்டம்பர் 26ஆம் தேதி மாலை கலிங்கப்பட்டிணத்துக்கு அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தள்ளது.

எனவே, இவ்விரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →